உலக செய்திகள்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

தஷ்கந்த்,

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள நாடு உஸ்பெகிஸ்தான். இதனிடையே, அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார்.

உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றடைந்தார். உஸ்பெகிஸ்தான் தலைநகர் தஷ்கந்த் சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் ஷவ்கத் மிர்சியோயெவ் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

இதையடுத்து, நாளை இருநாட்டு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், கனிமங்கள், சுகாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்யும் பிரதமர் மோடி நாளை அங்கிருந்து கிர்கிஸ்தான் செல்கிறார். கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.