பாக்தாத்,
ஈராக்கில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. பிரதமர் அடெல் அப்துல் மஹ்தி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனாலும் கூட்டம் கலையாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இன்று காலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது இந்த பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஈராக்கில் உள்ள நாசிரியா, திவானியா மற்றும் பாஸ்ரா உள்ளிட்ட பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.