உலக செய்திகள்

பெர்லின் பூங்காவின் ராணி: உலக சாதனை படைத்த பாட்டி கொரில்லா

பாதூ என்ற பெண் கொரில்லா, தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை

பெர்லின்,

1959-ல் பெர்லின் மிருகக்காட்சிசாலைக்கு வந்த பாதூ, அந்த மிருகக்காட்சிசாலையின் மிக பழமையான விலங்கு, மேலும் உலகளவில் மனித பராமரிப்பில் உள்ள மிக பழமையான கொரில்லாவாகவும் திகழ்கிறது.

தனது முதுமையின் காரணமாக, அது உயிரின பாதுகாப்பிற்கான ஒரு மிக சிறப்பு தூதராகவும், இயற்கை வாழ்விடத்தில் குறைந்து வரும் தனது இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் விளங்குகிறது.

1974-ல் பெர்லின் மிருகக்காட்சிசாலையில் பிறந்த முதல் கொரில்லாவை பாதூ ஈன்றது. கொரில்லாவின் முதல் குட்டி 2001-ல் இறந்துவிட்டது. ஆனாலும் தனது பேத்தி இன்றும் பெர்லினில் கொரில்லவிற்கு துணையாக இருக்கிறது.

காடுகளில் வாழும் கொரில்லாக்கள் 30 முதல் 35 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழும் நிலையில், ஜெர்மனி பெர்லின் பூங்காவில் வசிக்கும் பாதூ என்ற பெண் கொரில்லா, தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை ஆகும்.