உலக செய்திகள்

சீனாவின் மஞ்சள் நதியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

ஆர்பரித்து பொங்கி வரும் மஞ்சள் நதியை காண ஏராளமான சுற்றுழா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

பீஜிங்,

சீனாவில் உள்ள மஞ்சள் நதி(Yellow River) அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும். இது ‘சீன நாகரிகத்தின் தொட்டில்’ என்றும், சீனாவின் ‘தாய் நதி’ என்றும் அழைக்கப்படுகிறது. வண்டல் மண் காரணமாக மஞ்சள் நிறத்தில் பாயும் இந்த நதி, அதிகப்படியான வெள்ளப்பெருக்கு காரணமாக வரலாற்று ரீதியாக பல அழிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த நதி ‘சீனாவின் துயரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மஞ்சள் நதியில் உள்ள கூகோ நீர்வீழ்ச்சியில்(Hukou Waterfall) கோடைகால வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுகிய பாதை வழியே சுமார் 20 மீட்டர் உயரத்தில் இருந்து தங்க நிறத்தில் மஞ்சள் ஆறு சீறி பாய்கிறது. இந்நிலையில், சீரிப்பாயும் தண்ணீரின் பிரம்மாண்டமான அழகை கண்டு ரசிப்பதற்காக அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.