உலக செய்திகள்

தேச துரோக வழக்கு: ‘படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார்’ - முஷாரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா?

தேச துரோக வழக்கு தொடர்பாக, படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் என முஷாரப் கோரிக்கை விடுத்துள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 76). இவர் 2007-ம் ஆண்டு, அதிபராக இருந்தபோது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி, நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக முஷாரப் மீது லாகூர் ஐகோர்ட்டில் தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு துபாய் சென்றார். இன்னும் நாடு திரும்பவில்லை.

தற்போது துபாய் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், தான் உடல்நலம் பெற்று, நேரில் ஆஜராகும் வரையில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று லாகூர் ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடக்கிறது. இதற்கு மத்தியில், ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் என்று கோர்ட்டுக்கு முஷாரப் வீடியோ செய்தி அனுப்பி உள்ளார். இதை கோர்ட்டு ஏற்குமா என தெரியவில்லை.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்