உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன உளவாளி பெண் உடன் ரகசிய உறவில் இருந்ததாக ஜென்சன் ஹுவாங் குற்றச்சாட்டு வெளியானது. அதை அவர் ஒப்புக் கொண்டார். இந்த சூழலில் நவம்பர் மாத தொடக்கத்தில் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார். தேசிய பாதுகாப்பு சார்ந்து அவர் தவறான செயல் எதுவும் செய்யவில்லை என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக கடிதமும் என்விடியா நிறுவனத்துக்கு அனுப்பியதாக தகவல். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜென்சன் ஹுவாங் மீனும் சிஇஓ-வாக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஜென்சன் ஹுவாங்கை சிஇஓ பொறுப்பில் நியமிப்பதாக என்விடியா அறிவித்துள்ளது.
அப்போது என்விடியா நிர்வாக குழுவிடம் தனக்கு மேலும் பல பெண்களுடன் உறவு இருந்ததை ஜென்சன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கூடுதலாக எத்தனை பெண்களுடன் தொடர்பு இருந்தது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே, சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அமெரிக்க அதிகாரிகளால் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங், என்விடியாவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவல் மற்றும் பெயர் வெளியிடப்படாத மற்றொரு பெண் ஊழியர் ஆகியோருடன் ஜென்சன் ஹுவாங் தொடர்பில் இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.