நியூயார்க்,
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (GTA 6) வீடியோ கேம், வெளியான ஒரே நாளில் சுமார் ரூ. 21,952 கோடி வருவாய் ஈட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம், 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' வீடியோ கேமை தயாரித்தது. இதையடுத்து இந்த வீடியோ கேம் நேற்று (வியாழக்கிழமை) உலகளவில் வெளியானது. சந்தை ஆய்வு நிறுவனமான 'சென்சார் டவர்' வெளியிட்டுள்ள முதற்கட்ட மதிப்பீட்டின்படி, வெளியான 24 மணி நேரத்திற்குள் சுமார் ரூ. 21,952 கோடி வசூல் விற்பனையாகியுள்ளன.
இந்த மொத்த விற்பனையில் சுமார் 75 சதவீத பிரதிகள் பிளேஸ்டேஷன் பயனர்கள் மூலமும், மீதமுள்ள 25 சதவீதம் எக்ஸ்பாக்ஸ் பயனர்கள் மூலமும் வாங்கப்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
சுமார் 212 ஜிபி அளவு கொண்ட இந்த கேமை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்ததால், பல நாடுகளில் இணையதள டிராபிக் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள வருவாய் மற்றும் விற்பனை விவரங்கள் சந்தை ஆய்வு நிறுவனங்களின் கணிப்புகளே ஆகும். கேமின் தயாரிப்பு நிறுவனமான ராக்ஸ்டார் கேம்ஸ் மற்றும் அதன் தாய் நிறுவனமான டேக்-டூ இன்டராக்டிவ் ஆகியவை இதுகுறித்த அதிகாரப்பூர்வ விற்பனை புள்ளிவிவரங்களை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.