GTA 6 வீடியோ கேம் 
உலக செய்திகள்

GTA 6 வெளியீட்டு நாளில் பள்ளிக்கு வந்தால் ரூ.8,600 பரிசு: இங்கிலாந்து பள்ளிகள் அறிவிப்பு!

GTA 6 கேம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதால், நேரடியாக அந்த கேமை பரிசாக வழங்க முடியாது என பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

லண்டன்,

கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6 என்ற வீடியோ கேம் வெளியீட்டு நாளான இன்று பள்ளிக்கு வருகை தந்தால் ரூ.8,600 பரிசு கூப்பன் வழங்குவதாக இங்கிலாந்து பள்ளிகள் நூதன முறையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

GTA 6 வீடியோ கேம் வெளியீடு

உலகெங்கிலும் உள்ள கேமிங் பிரியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கிராண்ட் தெப்ட் ஆட்டோ 6' (GTA 6) வீடியோ கேம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இதனையொட்டி மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுப்பதைத் தடுக்கும் விதமாக, இங்கிலாந்தில் உள்ள 2 பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு கூப்பன்களை அறிவித்துள்ளன.

வகுப்புகளுக்கு வந்தால் ரூ.8,600 வவுச்சர்

வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள பெல்பாஸ்ட் பாய்ஸ் மாடல் ஸ்கூல், நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய 2 நாட்களும் தவறாமல் வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்காக சிறப்பு குலுக்கல் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவருக்கு £70 (சுமார் ரூ.8,600) மதிப்புள்ள பிளேஸ்டேஷன் அல்லது எக்ஸ்பாக்ஸ் பரிசு கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வைக் கருத்தில் கொண்டு எடுத்த முடிவு

GTA 6 கேம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது என்பதால், நேரடியாக அந்த கேமை பரிசாக வழங்க முடியாது என பள்ளி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த வாரத்தில் ஜிசிஎஸ்இ கணிதத் தேர்வுகளும் நடைபெறுவதால், மாணவர்கள் தேர்வுகளில் கவனம் செலுத்தவும், பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் மேரி மாண்ட்கோமரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து பள்ளியிலும் சிறப்புச் சலுகை

இதேபோல், இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாம் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கத்தோலிக்க பள்ளி மற்றும் சிக்ஸ்த் பார்ம் கல்லூரியும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கேம் வெளியாகும் நாளான இன்று முழு நாளும் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு £65 (சுமார் ரூ.8,010) மதிப்புள்ள அமேசான் பரிசு கூப்பன் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT