ஏஐ படம் 
உலக செய்திகள்

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகள்: அமெரிக்கா புதிய விளக்கம்

கிரீன் கார்டு பெறுவதற்காக எல்லா குடியேறிகளும் வெளியேற வேண்டியது இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெறும் விதிகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது. அதன்படி அங்கே தங்கியிருப்பவர்கள் கிரீன் கார்டு பெறுவதற்காக மீண் டும் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி, அங்கிருந்துதான் விண் ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.இது வெளிநாட்டினரை கடுமையாக பாதித்து உள்ளது. மேலும் இதற்கு உள்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி உள்ளது. அதன்படி எல்லா வெளிநாட்டினரும் கிரீன் கார்டுக்காக அமெரிக் காவை விட்டு வெளியேற வேண்டியதில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புத்துறை விளக்கம்

அதாவது கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்படும் ஒவ்வொரு மனுவையும் பொறுத்து அந்தந்த அதிகாரிகளே முடிவு செய்வார் கள் எனவும், கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டுமா என்பதை அந்தந்த அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள் அல்லது பொது நல உதவிகளை அதிக அளவில் பயன்படுத்தும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்றவர்கள் மட்டுமே இந்த அறிவிப்பால் பாதிக்கப்படக்கூடும் என பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.