மாஸ்கோ,
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விக்ட்ஆப் மற்றும் ஜெரட் குஷ்னர் ரஷியா, உக்ரைனுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேவேளை, இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளும் கடந்த 5ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அறித்தன. அதன்படி, இருநாடுகளும் கடந்த 3 நாட்களாக தாக்குதல் எதையும் நடத்தவில்லை. அதேவேளை, தற்காலிக தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில் மீண்டும் இரு நாடுகளும் தாக்குதலை தொடங்கியுள்ளன.
அந்த வகையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா இன்று ஏவுகணை, டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.