கீவ்,
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உக்ரைனின் டினிப்ரோபெட்ரொஸ்க் மாகாணம் கமியன்ஸ் நகரில் ரஷியா இன்று காலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விக்ட்ஆப் மற்றும் ஜெரட் குஷ்னர் ரஷியா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.