கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷ்யாவில் புதிதாக 12,604 பேருக்கு கொரோனா பாதிப்பு; மேலும் 337 பேர் பலி

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 41.77 லட்சத்தைக் கடந்துள்ளது

மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 41,77,330 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 337 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 83 ஆயிரத்து 630 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 37,26,388 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,67,312 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT