கீவ்,
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவ் நகரில் உள்ள டெனியன்ஸ்கி, கொலொசிஸ்கை மாவட்டங்கள், கார்கிவ் மாகாணங்களில் உள்ள தகவல் தொலைதொடர்பு நிறுவனங்கள், மின் நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலால் உக்ரைனில் உள்ள நகரங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின.