உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதி அரேபியா புதிய முடிவு

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள சவுதி அரேபியாவில் கூட்டு ராணுவப் படைகளை நிறுத்த பாகிஸ்தான்-துருக்கி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மெக்கா பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் அமலாவதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய 3 நாடுகள் இணைந்து வரலாற்றுச் சிறப்புமிக்க மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்த 3 நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மற்ற இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும். அத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும். மெக்கா, மதீனா ஆகிய புனித நகரங்கள் மற்றும் அவற்றின் முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதே இந்த ஒப்பந்தத்தின் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் சவுதியின் பொருளாதார பலம், பாகிஸ்தானின் அணு ஆயுத பலம் மற்றும் துருக்கியின் நவீன விமானப்படை பலம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

ஹவுதியின் முன்னேற்றம்

ஏமனின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2014-ல் அதன் தலைநகர் சானாவைக் கைப்பற்றி உள்நாட்டுப் போரைத் தொடங்கினர். ஹவுதிகளை ஒடுக்கவும் ஏமன் அரசை ஆதரிக்கவும் சவுதி தலைமையிலான கூட்டணி 2015 முதல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.தற்போது ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக முன்னேறி வருகின்றனர். சவுதி அரேபியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஏமனின் முக்கியத் துறைமுகங்கள் ஹவுதி வசமாகின. தொடர்ந்து சவுதியின் மதீனா மின்நிலையம் மீது ஹவுதி கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இணைந்த முத்தரப்பு நாடுகள்

சவுதி அரேபியாவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய 3 நாடுகளும் இணைந்து மெக்கா பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் அமல்ப டுத்த அதிரடி முடிவை எடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சவுதி அரேபியாவில் கூட்டு ராணுவப் படைகளை உடனடியாக நிறுத்தவும் அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன. ரியாத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதைய திட்டத்தின்படி, சவுதி அரேபிய ராணுவம் நேரடியாகக் களத்தில் போரிடும். அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோ அமைப்பில் 2-வது பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள துருக்கி ஆகிய நாடு கள், சவுதிக்கு ஆதரவாக உளவு மற்றும் தற்காப்புப் பணிகளில் ஈடுபடத் தங்க ளின் படைகளை அனுப்பவுள்ளன. இந்த ஒப்பந்தம் மற்றும் ராணுவ நடவடிக்கை களின் மூலம் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நாடுகள் திட்டமிட் டுள்ளன

ஹவுதி ஏவுகணை வீச்சு

சவுதி அரேபியாவின் எல்லை நகரங்களான ஜாசன் மற்றும் நஜ்ரானில் உள்ள இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர் கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். சவுதி நாட்டின் அரசுப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது.இதில் விமான நிலையக் கட்டிடங்கள் சேதமடைந்தன. சவுதி வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஹவுதி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT