துபாய்,
ஈரான் மீது கடந்த மாதம் 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியை படுகொலை செய்தது.
அதைத்தொடர்ந்து வளைகுடா பிராந்தியம் முழுவதும் மூண் டுள்ள போரில் ஈரானில் 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டு உள்ளனர். இதில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய தலைவர்களும் உயிரிழந்து உள்ளனர்.
இதில் மற்றுமொரு இழப்பாக அந்த நாட்டின் உச்சபட்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் பலியானார்.
இதற்கிடையே, லாரிஜானி மற்றும் சுலைமானி கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் அரபு நாடுகள் மீதும் ஈரான் நேற்று தாக்குதலை தீவிரப்படுத்தியது.
அந்தவகையில் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் நிறைந்துள்ள கிழக்கு மாகாணத்தில் அடுத்தடுத்து டிரோன்களை வீசி அதிரடித்தது. மேலும் ஏவுகணைகளையும் சரமாரியாக வீசியது.
இதில் இளவரசர் சுல்தான் விமானப்படை தளம் நோக்கி வந்த ஏவுகணை ஒன்றை சவுதி அரேபியா படைகள் தாக்கி அழித்தன. இதைப்போல ரியாத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தை நோக்கி வந்த 2 டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
குவைத், பஹ்ரைன், கத்தார் போன்ற வளைகுடா நாடுகளும் நேற்று ஈரானின் தாக்குதலுக்கு ஆளாகின. ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் தாக்குதலுக்கு ஆளானது. எனினும் இதில் யாரும் காயம் அடைந்ததாக தகவல் இல்லை.
இந்தநிலையில்,
சவுதி எண்ணெய் வளங்கள் மீதும், சவுதி, அமீரகத்தில் பொதுமக்கள் மீதும் சர்வதேச சட்டங்களை மீறி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
எங்கள் பொறுமை எல்லையற்றது அல்ல. ஈரான் மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சிதைந்துவிட்டது. ஈரானின் மிரட்டல் முயற்சியை கண்டு நாங்கள் அச்சப்படவில்லை. ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் உரிமை சவுதிக்கு உள்ளது என ஈரானுக்கு சவுதி இளவரசர் பைசல் பின் பர்ஹான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.