உலக செய்திகள்

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிப்பு

இந்த ஏரியில், 2.9 லட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்த 79 டிகிரி வெப்பமான நீர் உள்ளது.

உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை தெற்கு அல்பேனியாவில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அல்பேனியாவில் உள்ள அட்டோமஸ் குகைக்குள் உலகின் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரி 138 புள்ளி 3 மீட்டர் நீளமும், 42 மீட்டர் அகலமும் கொண்டது, மேலும் 345 மீட்டர் சுற்றளவு கொண்டது. இது 8 ஆயிரத்து 335 கன மீட்டர் வெப்ப கனிம நீரைக் கொண்டுள்ளது, இது ஒரு அசாதாரண இயற்கை அதிசயம் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள். 25 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில், 2.9 லட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்த 79 டிகிரி வெப்பமான நீர் உள்ளது.

இந்த ஏரியை முதன் முதலில் 2021-ம் ஆண்டு செக் குடியரசின் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். ஆனால் அதன் முழு அளவை மதிப்பிடுவதற்கான உபகரணங்கள் இல்லாத நிலையில், தற்போது 3D ஸ்கேனர்களுடன் விஞ்ஞானிகள் மிகப்பெரிய நிலத்தடி வெப்ப ஏரியை கண்டுபிடித்துள்ளனர்.

லேக் நியூரோன் என்ற இந்த ஏரியின் அளவை ஆய்வாளர்கள் தற்போது உறுதி செய்துள்ளனர். 34,450 சதுர அடி பரப்பளவு, 25 அடி ஆழம் கொண்ட இந்த ஏரியில், 2.9 லட்சம் கன அடி கனிமங்கள் நிறைந்த 79 டிகிரி வெப்பமான நீர் உள்ளது.