உலக செய்திகள்

செனகல்: அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல்.

டகர்,

செனகலில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அகதிகள் படகு

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு செனகல். இந்நாட்டின் கடற்கரை நகரான யெனியில் இருந்து நேற்று அகதிகள் படகு புறப்பட்டுள்ளது. வட அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளை நோக்கி புறப்பட்ட அந்த படகில் அகதிகள் 50க்கும் மேற்பட்டோர் புறப்பட்டுள்ளனர்.

விபத்து - 4 பேர் பலி

படகு நடுக்கடலில் பயணம் செய்தபோது படகு பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பாகில் பயணித்த அனைவரும் கடலில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து அறிந்த செனகல் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் அகதிகளில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. எஞ்சியோரின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT