பீஜிங்
சீனாவின் வடமேற்கே ஹைக்சி மங்கோலியன் மாகாணத்தில் இன்று மாலை 5.06 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை சீன நிலநடுக்கம் நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து மாலை 6.10 மணியளவில் நிலநடுக்க பேரிடருக்கான அவசரகால எச்சரிக்கை விடப்பட்டது. இதனை அடுத்து, நிலநடுக்க பகுதியை சுற்றிய இடத்தில் அமைந்த நிலக்கரி சுரங்கத்தில் இருந்து, அனைத்து பணியாளர்களும் முழு அளவில் வெளியேற்றப்பட்டனர்.
எனினும், இந்த நிலநடுக்க தாக்கத்திற்கு ஒருவர் பலியாகி உள்ளார். 4 பேர் காயம் அடைந்தனர். நிலநடுக்க பகுதியில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு குழு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.