உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்: மகாத்மா காந்தி சிலை திருட்டு

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என விக்டோரியா காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தி சிலை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 420 எடை கொண்ட வெண்கல சிலையை மர்ம கும்பல் ஒன்று தூக்கிச் சென்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சிலை 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அப்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசனால் திறந்து வைக்கப்பட்டது.

மகாத்மா காந்தி சிலை திருடப்பட்டுள்ள சம்பவம் அங்குள்ள இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 426 கிலோ எடையுள்ள இந்த வெண்கலச் சிலை, இந்தியக் கலாச்சார உறவுகள் கவுன்சிலால் (ICCR) ஆஸ்திரேலியாவிற்குப் பரிசாக வழங்கப்பட்டது. மர்ம நபர்கள் ஆங்கிள் கிரைண்டர்' கருவியைப் பயன்படுத்திச் சிலையினைக் கீழே இருந்து அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். சிலையின் பாதங்கள் மட்டும் அங்கேயே விடப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மூன்று பேர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என விக்டோரியா காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "அகிம்சையின் அடையாளமான மகாத்மா காந்தியின் சிலையை உடைத்துத் திருடியது மிகவும் வருந்தத்தக்கது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் இந்தியா தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலனில் இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் சமரசம் செய்யாது: பிரதமர் மோடி

டெல்லி: ஹோலி, தீபாவளியில் மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் அறிவிப்பு

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்த தடை; ஸ்பெயின் திட்டம்

இந்தியாவில் 2025-ல் 19 விமான விபத்துகள்: மத்திய அரசு தகவல்

மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வங்காளதேசம், கொல்கத்தாவிலும் உணரப்பட்டது