ரங்பூர்,
வங்காளதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கொலையாளிகள். கொலை செய்துவிட்டு அங்கயே இருந்து உணவு சாப்பிட்டு, குளித்து விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில் மச்சுவாபார பகுதியில் கணபதி சக்கரவர்த்தி(வயது 65) அவரது மனைவி பிரிதிலா சக்ரவர்த்தி(50) , இவர்களின் மகள் ஆகமி(23) மற்றும் மகன் பிரியம்(12) ஆகியோர் வசித்து வந்தனர். கணபதி சக்ரவர்த்தி ஒரு ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். குடும்பத்தினர் சென்ற வாரம் (20-ம் தேதி) இரவு வீட்டில் இருந்துள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து வீடு பூட்டி இருந்ததுள்ளது. இதற்கிடையே சனிக்கிழமை இரவுக்குள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்த போது 4 பேரும் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். உடனடியாக உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக சித்தார்த் தாஸ்(19) மற்றும் முக்தா தாஸ்(23). என்ற இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் சக்ரவர்த்தி வீட்டின் அக்கம்பக்கத்தில் வசித்து வந்த சித்தார்த் மற்றும் முக்தா ஆகிய இருவரும், வியாழக்கிழமை (20-ம் தேதி) இரவு சக்ரவர்த்தி குடும்பத்தினரின் வீட்டின் மொட்டை மாடிக்கு யாபா என்கிற போதைப்பொருள் பயன்படுத்துவதற்காக சென்றதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் குடும்பத்தினர் 4 பேரும் கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று சக்ரவர்த்தி வீட்டின் மாடியில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று பார்க்க சென்ற சக்ரவர்த்தி. மாடியில் இருவரும் போதைபொருள் பயன்படுத்துவதை பார்த்துள்ளார். மேலும் தனது வீட்டின் மாடியில் என் அனுமதி இல்லாமல் எப்படி வந்துள்ளீர்கள். எப்படி நீங்கள் அமர்ந்து இவ்வாறு போதை பொருள் பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அவரது கழுத்தில் இருந்த துண்டினால் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு வந்த அவரது மனைவியையும் தாக்கி கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து வந்த அவரது மகள் பிரார்த்தியை போராடி அவரையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்பு அவரது 12 வயது மகனை விட்டு வைத்தால் காட்டி கொடுத்துவிடுவான் என்ற அச்சத்தில் அவனையும் கொலை செய்துள்ளனர்.
பிறகு,கொலை செய்துவிட்டு தப்பி செல்லவில்லை. அங்கயே இருந்து போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளனர். பின்பு அங்கயே குளித்து விட்டு ,வீட்டில் இருந்த பேரீச்சபழம் ,வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டு உள்ளனர். திருட்டிற்காக நடந்த சம்பவம் போன்று காட்டுவதற்கு வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பின்பு கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக அங்குள்ள பொருள், துணிகளை அங்கும் இங்கும் வீசியுள்ளனர். அவர்களின் செல்போன்களை எடுத்து தண்ணீரில் போட்டுள்ளனர். பின்பு வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தெருக்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்திருந்ததை பயன்படுத்தி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும், சித்தார்த் மீன் வியாபாரம் செய்து வருபவர் ஆவார். முக்தா தங்க நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தங்க வளையல் ஒன்றை தீயில் வைத்து பரிசோதிக்க முயன்றதற்கான தடயங்களையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இருவரும் கொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பேரீச்சம்பழக் கொட்டைகளில் இருந்து டிஎன்ஏ தடயங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.