உலக செய்திகள்

மெக்சிகோவில் கால்பந்து ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் மோரிலோஸ் மாகாணத்தில் குவர்னவாகா நகரில் புளோரஸ் மேகன் என்ற ஸ்டேடியத்தில் நேற்றிரவு கால்பந்து போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், திடீரென சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT