பீஜிங்,
சீனா தலைநகர் பீஜிங்கின் சாவ்யாங் பகுதியில் உள்ள, 528 மீட்டர் உயர முள்ள மிக உயர்ந்த 'சிடிக் டவர்' என்ற வானளாவிய அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தின் மீது ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமா னம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் தனியாக இருந்த விமானி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், விமானம் மோதிய வேகத்தில் கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்து கீழே சிதறியதில், அங்கு நின்றுகொண்டிருந்த அப்பாவி பொது மக்கள் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சீன அதிபரின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் இந்த விபத்து நடந்துள்ளதால், இது ஏதேனும் சதியா அல்லது விபத்தா என்ற கோணத்தில் சீன உளவுத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.