உலக செய்திகள்

தென்னாப்பிரிக்கா: கனிம சுரங்கம் இடிந்து விபத்து - 14 பேர் பலி

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா.

கேப்டவுன்,

ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு தென்னாப்பிரிக்கா. இந்நாட்டின் வடகிழக்கு மாகாணம் ரஷ்டன்பர்க் நகர் அருகே கைவிடப்பட்ட தனியார் கனிம சுரங்கம் உள்ளது.

சுரங்க விபத்து - 14 பேர் பலி

இந்த கனிம சுரங்கத்திற்குள் நேற்று இரவு நுழைந்த 22 பேர் கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் சட்டவிரோதமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது, திடீரென சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுனர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த சுரங்க விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.