உலக செய்திகள்

தென்கொரியா: வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 8 பேர் படுகாயம்

தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று தாக்குதல் நடத்திய முதியவரை கைது செய்தனர்.

சியோல்,

தென்கொரியாவில் வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

தென்கொரியாவின் இச்சான் மாகாணம் நம்டாங் மாவட்டத்தில் பிரபல வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.

கத்திக்குத்து - 8 பேர் படுகாயம்

இந்நிலையில், அப்போது அந்த வணிக வளாகத்திற்குள் 59 வயதான முதியவர் கத்தியுடன் நுழைந்துள்ளார். பின்னர், வணிக வளாகத்தில் இருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று தாக்குதல் நடத்திய முதியவரை கைது செய்தனர். மேலும், கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட முதியவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீது ஏற்கனவே கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT