கொழும்பு,
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி கிறிஸ்தவ மதப்பண்டிகையான ஈஸ்டரின் போது தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. 3 கிறிஸ்தவ மத வழிபாட்டு தலங்களான தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தற்கொலைப்படை, குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இந்த தொடர் குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதலில் 11 இந்தியர்கள் உள்பட பொதுமக்கள் 270 பேர் உயிரிழந்தனர். மேலும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலை இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவூகித் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. இந்த தொடர் குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிறையில் உயிரிழந்தார்.
அதேவேளை, இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்புவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில், ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் குற்றவாளிகள் என்று இலங்கை கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. குற்றஞ்சாட்டப்பட்ட 24 பேரின் 15 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முகமது இபாகிம் முகமது நப்சர் மவுலாவி
முகமது சரிபு அதாம் லீப்
ஹயது முகமது அகமது மில்ஹன்
முமது இப்ராகிம் சித்திக் அப்துல்லா
முகமது இப்ராகிம் ஹபீஸ் அப்துல் அக்
முகமது அன்வர் முகமது ரிஸ்கன்
முகமது மன்சூர் முகமது சனஸ்தீன்
அப்துல் மனுப் முகமது பெட்ரொஷ்
முகமது ரம்சி முகமது சஜித்
அப்துல் அத்லீப் முகமது சபி
ஹசினுல் ரிஸ்வி கலீது சமீர்
முகமது கனீபா சைனுல் அபுதீன்
முகமது முஸ்தபா முகமது ஹரீஸ்
ரசீக் ராசா ஹுசேன்
கச்சி முகமது முகமது ஜெஸ்மித்