கொழும்பு,
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 2006-ம் ஆண்டு நடந்த மிக் ரக போர் விமான கொள்முதல் முறைகேடு தொடர்பாக நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் நிதி குற்றவிசாரணைப்பிரிவில் 5 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரியாக அவர் இருந்தபோது இந்த கொள்முதல் நடைபெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் ரூ.66.91 கோடி (7 மில்லியன் அமெரிக்க டாலர்) முறை கேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் அவரது உறவினரும், உக்ரைன் நாட்டுக்கான இலங்கை முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க 2018-ல் கைது செய்யப்பட்டார். இதனிடையே, மற்றொரு ஊழல் வழக்கில் அவரது மருமகன் நமல் ராஜபக்சே கடந்த வாரம் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 18 வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.