உலக செய்திகள்

பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.3 ஆக பதிவு

பிஜி தீவில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

சுவா,

தெற்கு பசிபிக் சமுத்திரத்தில் தீவு கூட்டங்களில் ஒன்றாக பிஜி நாடு உள்ளது. இந்நிலையில், பிஜியின் சுவா பகுதியில் இன்று மாலை 4.40 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

நடப்பு ஆண்டின் ஏப்ரலில் இதே அளவிலான கடுமையான நிலநடுக்கம் பிஜியில் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்; நிர்மலா சீதாராமன்

மராட்டியம்: சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி 3 பேர் படுகாயம்

தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும்; பிரதமர் மோடி

மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்