உலக செய்திகள்

ஓமன் கடற்கரைக்கு சென்ற இந்திய கடற்படை கப்பல் - மாணவர்கள் பார்வையிட்டனர்

சலாலா இந்தியப் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கப்பலை பார்வையிட்டனர்.

மஸ்கட்,

இந்தியா - ஓமன் நாடுகளிடையே சிறப்பான நல்லுறவு இருந்து வருகிறது. மேலும் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில் ஓமன் சலாலா நகரில் அமைந்துள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்துக்கு இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுதர்ஷினி நேற்றுமுன்தினம் வந்தது. கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து 'லோகாயன்-26' என்ற 10 மாத கால நீண்ட தூர கடல்வழிப் பயணத்தின் வெற்றியை கொண்டா டும் வகையில் இக்கப்பல் ஓமனுக்கு வந்தது.

சுல்தான் காபூஸ் துறைமுகத்தில் கப்பலின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஓமனுக்கான இந்திய தூதர் பிரசாந்த் பிசே மற்றும் ஓமன் நாட்டின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, சலாலாவில் வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் மற்றும் சலாலா இந்தியப் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இக்கப்பலை பார்வையிட்டனர். கப்பலுக்கு வருகை தந்த அவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். பாய்மரக் கப்பலின் செயல்பாடுகள் மற்றும் தங்களின் கடல்வழிப் பயண அனுபவங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

SCROLL FOR NEXT