உலக செய்திகள்

சீனாவில் அடுத்தடுத்து சூறாவளி தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு; 429 பேர் காயம்

சீனாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த சூறாவளி தாக்குதலால் 12 பேர் உயிரிழந்தனர். 400க்கும் கூடுதலானோர் காயமடைந்தனர்.

பீஜிங்,

சீனாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளி தாக்குதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். சீனாவின் கிழக்கே ஜியாங்சு மாகாணத்தில் சுஜோ நகரில் ஷெங்ஜே பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் சூறாவளி வீசியது.

இதன் பாதிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். 149 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதன்பின்னர் மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உகான் நகரில் 2 மாவட்டங்களின் வழியே மற்றொரு சூறாவளியானது கடந்து சென்றது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு 8 பேர் உயிரிழந்தனர். 280 பேர் காயமடைந்தனர். சூறாவளியால் உகான் நகரில் 27 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுதவிர 130 வீடுகள் சேதமடைந்தன. கட்டிட பணி நடந்து வந்த இடத்தில் உள்ள கூடாரங்கள், 2 கிரேன்களும் சேதமடைந்தன. மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இந்த சூறாவளியானது மணிக்கு 202 முதல் 220 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசியது.

SCROLL FOR NEXT