நியூயார்க்,
அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் பத்திரிகை உலக அளவில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2026-ம் ஆண்டுக்கான பட்டியலை தற்போது வெளியிட்டு உள்ளது. உலக அளவில் 100 பேர் கொண்ட பட்டியலில் உலகளாவிய முன்னோடிகள், தலைவர்கள், பல்துறை ஜாம்பவான்கள், கலைஞர்கள், படைப்பா ளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர்.
இதில் தலைவர்களை பொறுத்தவரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங், இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகு, கனடா பிரதமர் மார்க் கார்னி, போப் லியோ, நியூயார்க் மேயர் மம்தானி, வங்காளதேச பிரதமர் தாரிக் ரகுமான், நேபாள பிரதமர் பாலேந்திர ஷா, ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்டோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்தியர்களை பொறுத்தவரை கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை, நடிகர் ரன்பிர் கபூர், இந்திய-அமெரிக்க சமையல் நிபுணர் விகாஸ் கன்னா, யூடியூப் தலைவர் நீல் மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கின்றனர்.