பியாங்யாங்,
ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் குழந்தைகளுக்கு ராணுவ பயிற்சி அளிப்பதாகக் கூறி, வடகொரியா மீது சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடை விதித்தது.
இதற்குப் பதிலடியாக, பியாங்யாங்கில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரக அலுவலகத்தை உடனடியாக மூடவும், தூதரகத் தலைவர் நாட்டைவிட்டு வெளியேறவும் வடகொரிய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட் டது.
இந்த நடவடிக்கையால் இரு நாடுகளுக்குமான தூதரக உறவு முறிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பீஜிங்கில் உள்ள சுவிஸ் தூதரகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள வடகொரியத் தூதரகம் வழியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையும் தொடர்புகளும் தொடரும் என சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகம் விளக்கியுள்ளது.