டெயிர் அல்-ஜார்
சிரியாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
சிரியாவில் பெய்து வரும் தொடர் மழையால், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த பெருவெள்ளத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர். 7 பேர் காயமடைந்து உள்ளனர். 4 பேரை காணவில்லை.
வெள்ள பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை மந்திரி ரயீத் அல்-சலே உத்தரவின் பேரில் அதிகாரிகள் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அவர்களில் 5 குழந்தைகளும் வெள்ள நீரில் மூழ்கியும், ஒருவர் சாலை விபத்திலும் உயிரிழந்தனர். 7-வது நபருக்கான மரணம் எதனால் ஏற்பட்டது? என்பது பற்றிய விவரம் தெரிய வரவில்லை.