பெஷாவர்,
பாகிஸ்தான் நாட்டில் பெஷாவரில் உள்ள வேளாண் பல்கலைகழகத்திற்கு சொந்தமான விடுதியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியின் விடுதியில் புகுந்த 3 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பர்தா அணிந்து வந்த 3 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனம் டான் தெரிவித்துள்ளது. 4 பேரில் ஒருவர் பத்திரிக்கையாளர் என்றும், மீதி 3 பேரில் கல்லூரி விடுதியின் பாதுகாவலர்கள் என்று தெரியவந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.
பெஷாவர் தலைநகர் காவல்துறை அதிகாரி சோஹைல் கான் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், அதிகாலை நாங்கள் தூங்கிகொண்டிருக்கும் போது திடீரென விடுதியின் நுழைவு வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்தும் சம்பவம் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.