கோப்புப்படம் 
உலக செய்திகள்

பிரேசிலில் கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியது

பிரேசில் நாட்டில் புதிதாக 65,387 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

இந்நிலையில், பிரேசில் நாட்டில் கொரோனா வைரசால் புதிதாக 65,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,03,26,008 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலில் கொரோனா வைரசால் மேலும் 1,433 பேர் பலியான நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,50,079 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 92,81,018 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 7,94,911 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.