உலக செய்திகள்

பாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்

பாகிஸ்தானில் வாய் பேச இயலாத டீன் ஏஜ் சிறுமியை 4 மாதங்களாக கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

லாகூர்,

பாகிஸ்தானின் படின் நகரில் கிராமம் ஒன்றின் அருகே கொத் மொஹிப் டால் என்ற பகுதியில் வாய் பேச முடியாத 17 வயது டீன் ஏஜ் சிறுமி வசித்து வந்துள்ளார். அவரை கும்பல் ஒன்று கடந்த 4 மாதங்களாக கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

சிறுமிக்கு வாய் பேச முடியாத பாதிப்பினால் சம்பவம் நடந்தபொழுது, அதுபற்றி தனது பெற்றோரிடம் கூற முடியவில்லை. தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்து உள்ளார். இதனால் இந்த விசயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காவும், சிகிச்சைக்காவும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் சிறுமியின் உறவினர்களே ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது. சந்தேக அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு