லண்டன்,
லண்டனில் உள்ள செல்சியா டவுன் ஹாலில், இத்தாலியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் 440.58 மீட்டர் நீளம் கொண்ட திராமிசு இனிப்பை (பிரபல இத்தாலி ஸ்வீட்) உருவாக்கினர். இதன்மூலம் உலகின் மிக நீளமான திராமிசு தயாரிப்பதற்கான உலக சாதனையை முறியடித்ததனர். இதற்கு முன்பு மிலனில் 273.5 மீட்டர் நீளம் கொண்ட திராமிசுவை உருவாக்கியதே உலக சாதனையாக இருந்தது.
லண்டனில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வானது, இத்தாலிய சமையல் கலைஞர் மிர்கோ ரிச்சி (Mirko Ricci) தலைமையில் நடைபெற்றது. இங்கிலாந்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், அந்நாட்டு அரச குடும்பத்தினரை கௌரவிக்கும் விதமாகவும் இந்த பிரம்மாண்ட டிராமிசு இனிப்பின் மீது தங்க கிரீடம் வைக்கப்பட்டது
இந்த இனிப்பை உருவாக்க மொத்தம் 19,000 முட்டைகள், 400 கிலோ சர்க்கரை மற்றும் 1,28,000 பிஸ்கட்களை பயன்படுத்தியுள்ளனர். உலக சாதனை அறிவிக்கபட்டபோது சமையல் கலைஞர்களும் மற்றும் பார்வையாளர்களும், இத்தாலியின் தேசிய கீதத்தை பாடி வெற்றியை கொண்டாடினர்.