Image Credits: AI 
உலக செய்திகள்

ஸ்னாப்சாட்டுக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் களமிறக்கும் புதிய ஆப்

இன்ஸ்டாகிராம் நிறுவனம் 'இன்ஸ்டென்ட்' என்ற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் நிறுவனம் 'இன்ஸ்டென்ட்' என்ற புதிய புகைப்பட பகிர்வு ஆப்பை சோதனை முறையில் அறிமுகப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற சில நாடுகளில் தற்போது பரிசோதனை நடைபெற்று வரும் இந்த ஆப், குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாக மறைந்து விடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இன்ஸ்டென்ட் ஆப்பின் முக்கிய சிறப்பு, இயல்பான மற்றும் எடிட் செய்யப்படாத தருணங்களை உடனுக்குடன் பகிர்வதே. இதில் பகிரப்படும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்; அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் அவை தானாக மறைந்து விடும். மேலும், மொபைல் கேலரியில் இருந்து படங்களை அப்லோடு செய்ய முடியாது. ஆப்ளிகேஷனுக்குள் உள்ள கேமரா மூலம் எடுத்ததை மட்டுமே பகிர முடியும் என்பதால், உள்ளடக்கம் உண்மையானதாகவும் நேரடியாகவும் இருக்கும். சில பகுதிகளில் இது தனி ஆப் ஆகவும், சில இடங்களில் இன்ஸ்டாகிராமின் ஒரு அம்சமாகவும் சோதனை செய்யப்படுகிறது.