உலக செய்திகள்

பொதுவாக்கெடுப்பில் கனடா நாட்டில் இருந்து பிரியும் முடிவை நிராகரித்த ஆல்பர்ட்டா மக்கள்

ஆல்பர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிந்து சுதந்திர நாடாக மாறுவதற்கான சட்டப்பூர்வ வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஒட்டாவா,

உலகின் 4-வது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள கனடாவின் முக்கிய மாகாணமாக ஆல்பர்ட்டா திகழ்கிறது. இங்குள்ள மக்கள் நீண்டகாலமாகவே கனடா மத்திய அரசு தங்கள் மாகாணத்தை ஒரு காலனி ஆதிக்க நாடு போல நடத்துவதாகவும், வரியை மட்டும் வாங்கிக் கொண்டு எதையும் திருப்பித் தருவதில்லை என்றும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.

இதன் உச்சக்கட்டமாக கனடாவில் இருந்து ஆல்பர்ட்டா மாகாணம் தனியாகப் பிரிந்து சுதந்திர நாடாக மாறுவதற்கான முதல்கட்ட சட்டப்பூர்வ வாக்கெடுப்பு அங்கு விறுவிறுப்பாக நடைபெற்றது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கனடாவுக்கு எதிராக வர்த்தகப் போர் தொடுத்து வரும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பதிவான வாக்குகளில் 76 சதவீத மக்கள் கனடாவுடன் இணைந்திருக்கவே ஆதரவு தெரிவித்துள்ளனர். வெறும் 23 சதவீதம் பேரே பிரிந்து போக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் ஆல்பர்ட்டா மக்கள் கனடாவின் ஒற்றுமைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து, பிரிவினைவாத முயற்சியை முறியடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT