உலக செய்திகள்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நிறைவு!

16-வது பாராஒலிம்பிக் போட்டி கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.

டோக்கியோ,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி தொடங்கி நடந்து வந்த நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பி போட்டியின் நிறைவு விழா கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.

இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டினர்.

நிறைவு விழாவில் இந்திய வீராங்கனை அவனி லெஹரா தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பாரா ஒலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை இந்தியா 24-வது இடம் பிடித்தது.