உலக செய்திகள்

டிரம்ப் கெடுபிடி: அமெரிக்காவில் 2.50 லட்சம் விசாக்கள் ரத்து

கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பிறகு, ‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, குடியேற்ற விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு

டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் தற்போது வரை விசா விதிமுறைகளை மீறியது, குற்றச் செயல்களில் ஈடுபட்டது, மோசடி செய்தது, அமெரிக்காவுக்கு எதிரான வன்முறையை ஆதரித்தது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை

குறிப்பாக, கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 1.75 லட்சம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், பிறப்பு சுற்றுலா தொடர்பான 2,300 விசாக்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை தற்போது ரத்து செய்துள்ளோம். அமெரிக்க மக்களை பாதுகாப்பதில் எங்களது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் இது” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT