டிரம்ப் 
உலக செய்திகள்

போலி வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் ஓட்டு மோசடி நடக்கிறது; டிரம்ப் குற்றச்சாட்டு

ஜனநாயக கட்சி சார்பில் 'டம்மி' வேட்பாளராக போலியாக நிறுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது

வாஷிங்டன்,

இந்தியாவில் கடந்த 2014 மக்களவை தேர்தலில் நடிகை ஹேமமாலினி போட்டியிட்ட மதுரா தொகுதி யில் அதே பெயரில் வேறு ஒரு வேட்பாளரும் நிறுத் தப்பட்டார். இதேபோல 2019 தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட்ட வயநாடு தொகுதியிலும் அவரது பெய ரில் மற்றொரு வேட்பாளர் போட்டியிட்டார். இது வாக் குப்பதிவில் சற்றே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழல் தற்போது அமெரிக்க இடைக்கால தேர்தலிலும் நடந்துள்ளது தெரியவருகிறது.

அங்குள்ள அலாஸ்கா மாகாணத்தில் டிரம்பின் குடியர சுக் கட்சி வேட்பாளராக டேனியல் சல்லிவன் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாய கக் கட்சி வேட்பாளர் மேரி பெல்டோலா அவரை எதிர்த்து நிற்கிறார். ஆனால் சல்லிவன் பெயரில் 3-வதாக ஒரு ஆசிரியரும் களம் காண்கிறார். அவர் ஜனநாயக கட்சி சார்பில் 'டம்மி' வேட்பாளராக போலியாக நிறுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது

இந்த விவகாரத்தை டிரம்ப் கட்சியினரும் கையில் எடுத்து உள்ளனர். இந்த ஓட்டு மோசடி குறித்து உடனடியாக நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார் டிரம்ப். "அலாஸ்கா ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியின் சல்லிவனிடம் இருந்து வாக்குகளைப் பெறுவதற்காக போலி வேட்பாளரை நியமித்து வாக்காளர்களைக் குழப்ப முற்பட்டு உள்ளனர்” என்று டிரம்ப் தரப்பினர் வாதிட்டு வருகிறார்கள். "இது மிக உயர்மட்ட அளவிலான ஓட்டு மோசடியாகும். அமெரிக்க தேர்தல்களில் இந்த நடத்தை தொடர அனுமதிக்க முடியாது" என்று டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

SCROLL FOR NEXT