கலிபோர்னியா
அமெரிக்காவின் முதல் 400 பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் முதன்முறையாக டொனால்ட் ட்ரம்பின் பெயர் இடம் பெறவில்லை.
2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது டிரம்பின் சொத்துமதிப்பு 27 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 18 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. இதனால் டிரம்ப் முதல் 400 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெறவில்லை என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.