உலக செய்திகள்

டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் சந்திப்பு எப்போது? - வெளியான அறிவிப்பு

புதின், டிரம்ப், ஜி ஜின்பிங் ஆகிய 3 தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

பீஜிங்,

டிரம்ப், புதின், ஜி ஜின்பிங் ஆகிய 3 பேரும் கூட்டாக சந்திப்பது எப்போது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு

ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் 33வது மாநாடு வரும் 18,19 ஆகிய இரு தேதிகளில் சீனாவில் நடைபெற உள்ளது. 21 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா, ரஷியா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஜி ஜின்பிங் , புதின், டிரம்ப் சந்திப்பு

இதனிடையே, சீனாவின் குவாங்டொங் மாகாணம் சென்சென் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு மத்தியில் 3 நாடுகளின் தலைவர்களும் வரும் 19ம் தேதி சந்திக்கின்றனர். புதின், டிரம்ப், ஜி ஜின்பிங் ஆகிய 3 தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச அரசியல் சூழ்நிலை, போர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பது உள்பட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

மத்திய கிழக்கு போர், உக்ரைன் - ரஷியா போர், வர்த்தக மோதலுக்கு மத்தியில் அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT