மாஸ்கோ,
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளை நெருங்கி வரும் நிலையில், இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நாள் எப்போது? என இதுவரை தெரியவில்லை.
இந்த நிலையில் உக்ரைனில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதித்து உள்ளது.
இந்த நிலையில் கீவ் உள்பட உக்ரைன் நகரங்கள் மீது ஒரு வாரத்துக்கு தாக்குதல் நடத்துவதை ரஷியா நிறுத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து உள்ளார். அவர் போர் நிரந்தர நிறுத்தத்துக்காக முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.