உலக செய்திகள்

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவே திறக்கும் - டிரம்ப்

ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டணம் வசூலிக்க ஈரானை அனுமதிக்க மாட்டோம் என டிரம்ப் கூறியுள்ளார்.

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்தவொரு ஒப்பந்தத்திலும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களது முதன்மையான ? நோக்கம் ஆகும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே இந்த விவகாரத்தின் 99 சதவீத அடிப்படையாகும். அவ்வாறு நடந்தால் ஹார்முஸ் ஜலசந்தி தானாகவே திறக்கப்படும். ஈரானின் உதவி இருந்தாலும் இல்லா விட்டாலும் ஜலசந்தியை மிக விரைவில் மீண்டும் திறப்போம்.

வளைகுடா பகுதியைத் அமெரிக்கா திறக்கும். இதற்கு பிற நாடுகள் உதவத் தயாராக உள்ளன. அதே வேளையில் இது எளிதாக இருக்காது. ஹார்முஸ் ஜல சந்தியில் கட்டணம் வசூலிக்க ஈரானை அனுமதிக்க மாட்டோம்.

அமெரிக்கா-ஈரான் இடையேயான பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தாலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரான் மறுத்தாலோ அமெரிக்காவிடம் மாற்று திட்டம் எதுவும் இல்லை. ஏனென்றால் ஈரானின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடம் மிகக் குறைவான ஏவுகணைகள், மிகக் குறைவான உற்பத்தித் திறன்களே உள்ளன. அவர்களை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளோம்.

இவ்வாறு கூறினார்.