டிரம்ப், ஸ்டீபன் மில்லர் 
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக டிரம்பின் ஆதரவாளர் நியமனம்

வெள்ளை மாளிகையின் மிக உயரிய பதவியான 'வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி' பதவியில் இருந்த சூசி வைல்ஸ் விலகியுள்ளார்.

வாஷிங்டன்.

வெள்ளை மாளிகையின் புதிய தலைமை அதிகாரியாக டிரம்பின் தீவிர ஆதரவாளரும், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுத்தவருமான ஸ்டீபன் மில்லர் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற இடைத்தேர்தல்

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில், டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது. இதனால் டிரம்பின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அடுத்தடுத்து நாடாளுமன்ற விசாரணைகள் பாயும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தலைமை அதிகாரி பதவி விலகல்

இந்த இக்கட்டான சூழ்நிலையில், வெள்ளை மாளிகையின் மிக உயரிய பதவியான 'வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி' பதவியில் இருந்த சூசி வைல்ஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, டிரம்பின் தீவிர ஆதரவாளரும், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை வகுத்தவருமான ஸ்டீபன் மில்லர் புதிய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தனது கொள்கைகளில் சமரசம் செய்யாமல் நாடாளுமன்றத்துக்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமாக செயல்படவே டிரம்பின் இந்த நடவடிக்கை என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT