உலக செய்திகள்

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனா பெரும் சிக்கல்களை சந்திக்கும் - டிரம்ப் எச்சரிக்கை

சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.

வாஷிங்டன்,

நிலையற்ற போர்நிறுத்தத்திற்கு மத்தியில் ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பினால் பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டி வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, வெள்ளை மாளிகையிலிருந்து புளோரிடாவுக்குப் புறப்பட்டபோது டிரம்ப் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

இதற்கிடையில் சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் மோதலில் ஈடுபட்டுள்ள எந்தத் தரப்புக்கும் சீனா ஒருபோதும் ஆயுதங்களை வழங்கியதில்லை கேள்விக்குரிய தகவல் உண்மையற்றது என்று கூறியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் பரபரப்பூட்டும் செய்திகளையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அந்த செய்தித் தொடர்பாளர் அமெரிக்காவை வலியுறுத்தினார்.