உலக செய்திகள்

துருக்கியில் கனமழை, வெள்ளம் ; 4 பேர் பலி

10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அங்காரா,

துருக்கியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

கனமழை, வெள்ளம்

மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டின் இஸ்தான்புல் மாகாணத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இஸ்தான்புல் மாகாணத்தின் சரியீர் மாவட்டம் கனமழை , வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

4 பேர் பலி

இந்நிலையில், துருக்கியில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT