உலக செய்திகள்

இப்படியும் ஒரு விவாகரத்து வழக்கு; மனைவி எதிலும் சுத்தம் எதிர்பார்க்கிறார்..கோர்ட்டை நாடிய கணவர்

மனைவியால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2.40 கோடி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

துபாய்,

கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாக கூறி துருக்கியை சேர்ந்த நபர் விவாகரத்து கோரியுள்ளார்.

இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர். சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர். சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருந்தாலும் அது நியாயமாக இருக்க வேண்டும் எதற்கெடுத்தாலும் விவாகரத்து என்று போனால் வாழ்க்கையை வாழவே முடியாது.

இந்தநிலையில், கழிவறையை சுத்தம் செய்த உடனே அதை பயன்படுத்த மனைவி மறுப்பதாகக் கூறி துருக்கியைச் சேர்ந்த நபர் விவகாரத்து கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மனைவி எதிலும் சுத்தம் எதிர்பார்க்கிறார். இரவு நேரத்தில் உடலுறவு கொள்வதிலும் அதீத சுத்தமாக இருக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கழிவறையை பயன்படுத்தக்கூடாது

4 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நடத்தி வந்த அந்த நபர் தனது மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மனைவி கழிவறையை சுத்தம் செய்த உடனேயே, அதனை பயன்படுத்த அனுமதிக்க மறுக்கிறார். ஒருவர் எதனை வேண்டுமானுலும் அடக்கலாம் இயற்கையை அடக்க முடியாது, அனுமதிக்காமல் தடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் முடிகள் உதிர்வது

மேலும், படுக்கையில் தனது தலைமுடி ஒன்று அல்லது சில முடிகள் விழுந்தாலும் மனைவி கடும் கோபம் அடைவதாகவும், இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமைத்தால் சமையலறை அழுக்காகிவிடும்

மனைவியின் தூய்மை மீதான கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்ததால், வீட்டில் வழக்கமான வேலைகளை செய்வதே சிரமமாகிவிட்டதாக கணவர் கூறியுள்ளார். குறிப்பாக சமையல் செய்தால் சமையலறை அழுக்காகிவிடும் என்பதால், இருவரும் வீட்டில் சமைப்பதை தவிர்த்து உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடத் தொடங்கியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இழப்பீடாக ரூ.2.40 கோடி

இந்த பிரச்சினைகளால் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மனைவியே காரணம் எனக் கூறியுள்ள கணவர், விவாகரத்துடன் 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.40 கோடி ) இழப்பீடு கோரியுள்ளார். இந்த தொகை வீட்டுடன் தொடர்புடைய செலவுகள் மற்றும் திருமண வாழ்க்கையால் ஏற்பட்டதாக அவர் கூறும் மன உளைச்சலுக்கான இழப்பீடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் சுத்தம் மீதான அதீத கவனம், கணவன்-மனைவி இடையேயான அன்றாட வாழ்க்கையையே பாதித்து, இறுதியில் விவாகரத்து வழக்கு வரை சென்ற சம்பவம் துருக்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT