லண்டன்,
இங்கிலாந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இன்று அதிகாலை வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டனர். அந்நாட்டின் டெவன் நகரில் பயிற்சி நடைபெற்றது. அந்த ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், டெவன் நகரில் உள்ள சர்டன் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் 3 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.